அன்புமணி மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியான தகவல்

 
விரைவில் கூட்டணி அறிவிப்பு - அன்புமணி ராமதாஸ் அதிரடி

பாமக தலைவர் அன்புமணிக்கு நேற்று முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாகவும், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Image
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மேனாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,-க்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார். அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்க்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.