டிராவிட்டின் அசத்தல் பயிற்சியே இந்திய அணியின் வெற்றிக்கு காரணம்- மோடி

 
மோடி

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவங்க ஸ்டைலில் கலக்கிட்டாங்க'.. 'இந்திய அணியை எண்ணி பெருமையாக இருக்கு'..  பிரதமர் மோடி பூரிப்பு | PM Narendra Modi congratulated Team India on their  historic victory in the T20 ...

உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் ஷர்மா, இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்தார். கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அற்புதமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவுக்கும் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ராகுல் டிராவிட்டுக்கு நன்றி தெரிவித்தார்.


மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “ராகுல் டிராவிட்டின் அபாரமான பயிற்சியே இந்திய கிரிக்கெட் அணியின் பயணத்துக்கு காரணம். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, போர் திறம் வாய்ந்த நுண்ணறிவு மற்றும் திறமைசாலிகளை கண்டறிந்து வளர்த்தல் ஆகியவை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளன. அவரது பங்களிப்புகளுக்காகவும், தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அவர் உலகக் கோப்பையை ஏந்தி நின்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.