பிரதமர் நரேந்திர மோடி தனது தியானத்தை இன்று நிறைவு செய்கிறார்!

 
ttt

மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்ட நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரியின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டு வருகிறார் . 

e

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று  கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த அவர் முதலில் பகவதி அம்மனை தரிசனம் செய்தார்.  பிறகு விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.  கையில் ருத்ராட்ச மாலை உடன் அமர்ந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை பிரதமர் மோடி சூரிய உதயத்தை கண்டு களித்து சூரிய பகவானையும் வழிபட்டார்.  இது தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். 

r

இந்நிலையில்  பிரதமர் மோடி  இன்று மாலை தியானத்தை நிறைவு செய்கிறார். பின்னர், படகு மூலமாக கரை திரும்பும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.