பிரதமர் மோடி பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து..

 
modi

பிரதமர் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.  

மோடி எடப்பாடி பழனிசாமி

பாமக நிறுவனர் ராமதாஸ், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; இந்தியத்  திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

மோடி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இன்று  74-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மூன்றாவது முறையாக  இந்தியப் பிரதமராக  பொறுப்பேற்றுள்ள  அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை  ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

OPS Modi

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “உங்களின் 74வது பிறந்தநாளின் இனிய சந்தர்ப்பத்தில், உங்களுக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அயராத அர்ப்பணிப்பும், துணிச்சலான பார்வையும், மாற்றும் தலைமையும் இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்து, நாடு முழுவதும் எண்ணற்ற உயிர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

நீங்கள் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை ஏற்றி வைத்துள்ளீர்கள்,   உங்கள் அர்ப்பணிப்பு,  நம்பிக்கை மற்றும் பெருமை கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது. வாக்குறுதியும் செழிப்பும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி எங்களை அழைத்துச் செல்லும் தேசத்தைக் கட்டியெழுப்ப  தைரியம், வலிமை, ஞானம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் அசாதாரணப் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.