கோவையில் பேரணி நடத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு!

 
modi

கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நடத்த பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். 

இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகை தந்தார் பிரதமர் மோடி. காலை 11 மணியளவில் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து மீண்டும் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிப்பு: 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நடத்த பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். 
பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதாலும் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SPG அதிகாரிகளுடன் காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.