முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!!

 
Q

2024 பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் அபாரமான வெற்றி பெற்று, காங்., - வி.சி.க., - கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை படைத்துள்ள முதல்வர் விஜய், இன்று (ஜூன் 22) 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து; நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.