"ரஜினியின் திரையுலக பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது”- மோடி புகழாரம்
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட காவலர் குடும்பம், தற்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சி குப்பத்தில் வாழ்ந்து வந்தபோது, அந்த குடும்பத்தின் நான்காவது குழந்தையாக 1950 டிசம்பர் 12 பிறந்த சிவாஜி ராவ் கெய்க்வாட். இவர் 1975 ஆம் ஆண்டில் இயக்குநர் சிகரம் திரு கே.பாலச்சந்தரால் “அபூர்வராகங்கள்” திரைப்படத்தில் “ரஜனிகாந்தாக” அறிமுகப்படுத்தப்பட்டார். அன்று தொடங்கிய திரையுலக வாழ்க்கை பொன்விழா காணும் இனிய தருணத்தில், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கி வருகிறார்.
நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். தமிழ்நாடு முழுவதும் பிஜேபி-யின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார்.… pic.twitter.com/fk9HyJMNSw
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரை வாழ்வின் பொன்விழாவுக்கு வாழ்த்துக் கூறியுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

