திருவள்ளுவர் தினம் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!!

 
ttn

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவை தமிழர்கள் இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படும்.   அதேபோல் தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

modi

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக  இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரைபெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. 


இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.