பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கவுள்ள பிரதமர் மோடி

பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மார்ச் மாதம் போக்குவரத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 550 கோடி மதிப்பிட்டில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து தொடர்ந்து ஆய்வுப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் அதனை சரி செய்யப்பட்டு தொடர்ந்து கப்பல் மற்றும் ரயில்கள் இயக்கி இரண்டு கட்டமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இறுதி கட்ட ஆய்வு மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகை தந்து பாம்பன் பழைய ரயில் பாலம் திறக்கப்பட்டு புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி ஆய்வு செய்தார். மேலும் பாம்பன் சாலை பாலத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறப்பது குறித்து அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். புதிய பாம்பன் பாலத்தை பார்வையிட்டார். இதன்பின் ராமேஸ்வரம் சென்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அமையும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களும் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மார்ச் மாதம் போக்குவரத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி ராமேசுவரத்தில் நடை பெறும் என்றும் தெரிவித்தார்.