“ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்.ஜி.ஆர்”- பிரதமர் மோடி புகழாரம்

 
மோடி எம்ஜிஆர்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்.ஜி.ஆர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


எம்.ஜி.ஆரின் சாதனைகளை பட்டியலிட்டு தனது குரலிலேயே பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் செய்துள்ள அளப்பறிய சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.


மேலும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும்,  சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.