ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம்: மோடி

 
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம்: மோடி

பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Empowered Nari Shakti": PM Modi Remembers J Jayalalithaa On Birth  Anniversary

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெ ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த நிர்வாகி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ்  தளத்தில், “ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும், மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.