சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்...!!
யோகா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ், 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் 2026 கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உலகில் மக்கள் முன்பை விட நீண்டகாலம் வாழ்வதாக அவர் கூறினார். எனினும் இந்த கூடுதல் காலத்தில் ஆரோக்கியம், செயல்பாடு, சுயசார்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்வதே உண்மையான சவாலாகும் என்று தெரிவித்தார்.
உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனநலத்தை மேம்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் முதுமை காலத்தில், சரியான பாதையை யோகா அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையேற்று பங்கேற்கிறார்.

