மார்ச் 31-ஆம் தேதி மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

 
1

 உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். 80ஆம் ஆண்டுகளில் ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் அருண் கோவிலை மீரட்டில்  களமிறக்கியுள்ளது பாஜக.

பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில்,  தற்போது உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் சமாஸ்வாதி பகுஜன் சமாஜ் கூட்டணி  வேட்பாளர் ஹாஜி யாகூப் குரேஷியை சுமார் 5,000 வாக்குககள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.