“இளைஞர்களுக்கான நேரமிது”- பிரதமர் மோடி

 
ச்

வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கும் என பிரதமர் மோடி கூறினார்.

சென்னை நந்தம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் உரையாற்றிய பிரதமா் மோடி, “இன்றைய உலகம் தீா்வுகளை தேடிக்கொண்டிருக்கிறது, அந்த தீர்வுகளை தரும் வல்லமை இந்திய இளைஞா்களுக்கு இருக்கிறது. நம் நாட்டில் கணக்கில்லாத வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, இளைஞா்களே இது உங்களுக்கான நேரம். 2030-ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்தியாவின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளிலும் நாம் முன்னேறி வருகிறோம். நவராத்திரியின் முதல்நாளில் சிவ, சக்தி ரூபமான தமிழ்நாட்டின் புனித மண்ணில் கால் பதித்திருக்கிறேன். மாணவர்களான உங்கள் கண்களில் பளிச்சிடும் ஒளியை காணும் போது நம் நாட்டின் எதிா்காலம் எனக்கு தொிகிறது. மாணவர்களின் கண்களில் உற்சாகம், துடிப்பை பார்க்கும்பொழுது இந்தியாவின் எதிர்காலம் தெரிகிறது. அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் நாம் அச்சமின்றி வாழ உத்வேகம் அளிக்கிறது. வித்தியாசமாக சிந்தியுங்கள், சிறப்பாக செயல்படுங்கள், அச்சமின்றி வாழுங்கள்” என்றார்.