விஜயுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் - பிரதமர் மோடி
13,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்கள் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, தொழில் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தி, மாநிலம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்... நவராத்திரி தொடக்க விழாவில் புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது. சிவபெருமானின் புனித பூமியான தமிழ்நாட்டில் நான் ஜலகண்டேஸ்வரரின் நல்லாசிகளை பெற்றேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வராக இருந்தபோது பல முறை கருணாநிதி, ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமராக இருந்தபோதும் கருணாநிதி, ஜெ., ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலினுடன் பணியாற்றினேன். முதலமைச்சர் விஜயுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்.
நாட்டின் உற்பத்தித்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்ட இன்றைய நாள் தமிழ்நாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். கப்பல் கட்டுமானத்தில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. கப்பல் கட்டுமானத்தில் தமிழ்நாட்டுக்கு சரித்திரம் வாய்ந்த பங்கு இருக்கிறது. சென்னை மீன்பிடி துறைமுக மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவி புரிந்து வர்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தை ரூ.17,000 கோடியில் நவீனமயமாக்கவும் விரிவாக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

