திமுகவினருக்கும் போதை கும்பலுக்கும் தொடர்பு- பிரதமர் மோடி
திமுக அரசு போதைப்பொருள் மாபியாவுடன் கைகோர்த்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. NDA ஆட்சிக்கு வந்ததும் போதை பொருள் மாபியா ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. தமிழ்நாடு எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ, இந்தியாவும் வளரும். காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 3 மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகத்தின் மிகப்பெரிய பலம் விவசாயிகளும், மீனவர்களும்தான். மீனவர்கள் நலனை காக்கும் மத்திய அரசு. மீனவர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை மதுராந்தகத்தில் உணர்ந்தேன்.. மக்கள் என்.டி.ஏ-ஐ விரும்புகிறார்கள்.திமுக அரசு போதைப்பொருள் மாபியாவுடன் கைகோர்த்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால், தமிழ்நாடு போதைப்பொருள் மாபியாவிலிருந்து விடுபடும்.
திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயலாற்றினார் ஜெயலலிதா. குற்றங்கள் நடைபெறாமல் நிர்வாகம் செய்தார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் எண்டிஏ அரசு அமையும்போது பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும்.” என்றார்

