அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது - பிரதமர் மோடி

 
modi

அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது.  டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது.  இளைஞர்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு இடமில்லாத எந்த துறையும் இன்று இல்லை. பெண்களின் சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது. முன்பு பெண் குழந்தைகள் பிறப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்து விட்டது. 

எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்.
இந்தியாவின் முன்னேற்றம் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு தனது உரையில் குறிப்பிட்டார். 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவரின் உரை அமைந்திருந்தது. குடியரசுத் தலைவரின் உரை உண்மைத் தகவல்களின் அடிப்படையிலானது என கூறினார்.