அருமையான பட்ஜெட்டை அளித்து நிர்மலா சீதாராமன் சாதித்துள்ளார்- பிரதமர் மோடி

 
மோடி மோடி

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், 2047 வளர்ந்த இந்தியா திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது பட்ஜெட் . வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். உலகத்தின் டேட்டா சென்டர் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், 2047 வளர்ந்த இந்தியா திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது பட்ஜெட் . அருமையான பட்ஜெட்டை அளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதித்துள்ளார்” எனக் கூறினார்.