வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது ஒரு திருப்புமுனை - பிரதமர் மோடி

வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்த நிலையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இந்த நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்புமுனை நீண்டகாலமாக குரல்களற்று, வாய்ப்புகள் வழங்கப்படாமல் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு வக்பு மசோதா பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.