தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து...

 
மோடி


தமிழகத்தைத் தொடர்ந்து  புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக்  கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜன. 12 அன்று நடைபெறவுள்ளது.  இந்தக்  கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி , தனி விமானம் மூலம்  தமிழகம் வர இருக்கிறார்.   மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது.

மோடி பொங்கல் விழா
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கல்லூரிகளை திறந்து வைத்த  பின்னர், மதுரையில் பாஜக  சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல்  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜன.12 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய  இளைஞர் தின விழாழை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

ஆனால் மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா  ஒத்திவைக்கப்பவதாக நேற்று  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.  இதனைத்தொடர்ந்து தற்போது, பிரதமர் மோடி பங்கேற்க இருந்த புதுச்சேரி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மோடி

கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்,  மாறாக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என்றும் அம்மாநில தலைமை செயலாளர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலாவது பிரதமர் மோடி  பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..