இத்தாலி பிரதமர் மெலோனிக்கு 'மெலோடி' சாக்லேட்டை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ..!
யுஏஇ. நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே உள்பட 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இறுதிகட்டமாக இத்தாலிக்கு சென்றுள்ளார். தலைநகர் ரோமில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, இருநாடுகளுக்கு இடையயான உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, இத்தாலி பிரதமர் மெலோனிக்கு, 'மெலோடி சாக்லேட்டை பிரதமர் மோடி பரிசாக கொடுத்தார். அதனை செல்பி வீடியோவாக எடுத்த மெலோனி, தன்னுடைய பெயரைப் போலவே சாக்லேட்டின் பெயரும் இருந்ததால், 'மெலோடி என்று சொல்லியபடி இரு தலைவர்களும் கலகலப்பாக சிரித்தனர். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த இத்தாலி பிரதமர் மெலோனி, 'இந்தப் பரிசுக்கு நன்றி, எனக் குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | "Thank you for the gift", tweets Prime Minister of Italy, Giorgia Meloni
— ANI (@ANI) May 20, 2026
She says, "Prime Minister Modi brought as a gift, a very, very good toffee- Melody"
(Video Source: Giorgia Meloni/'X') pic.twitter.com/wbMALD723q