பொங்கல் நாட்டின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளம் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து...

 
பொங்கல் வாழ்த்து மோடி

பொங்கல் நாட்டின் எழுச்சிமிக்க காலாச்சாரத்தின் அடையாளம் என பிரதமர் மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் அறுவடைத்திருநாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களுக்கு பொங்கல் போல், மகர சங்கராந்தி, பிஹூ, உத்தராயன் என பல மாநிலங்களில் பல்வேறு விதமான  பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன,. அனைத்து பண்டிகைகளுக்கும் அந்தந்த மாநில மொழிகளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

பொங்கல்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, எனது வாழ்த்துக்கள்.  இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழ்மாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

மோடி பொங்கல் வாழ்த்து