பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Updated: Apr 6, 2025, 13:42 IST1743927122483

பாம்பன் - ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காலி சென்றார். அப்போது அங்கு சாலையோரம் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.