இன்று ஹோலி பண்டிகை : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து!
இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கலவை பூச்சுகள் மற்றும் வண்ண நீரை ஒருவர் மீது ஒருவர் தெளிக்க பயன்படும் பொம்மை துப்பாக்கிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹோலி பண்டிகை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், ”நாட்டிலுள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா, உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
देश के मेरे सभी परिवारजनों को होली की अनेकानेक शुभकामनाएं। स्नेह और सद्भाव के रंगों से सजा यह पारंपरिक पर्व आप सभी के जीवन में नई ऊर्जा और नया उत्साह लेकर आए।
— Narendra Modi (@narendramodi) March 24, 2024