பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டுமே உருவாக்கினார். ஆனால் நாங்களோ...

 
1

நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 3-ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்னும் 4 கட்ட தேர்தல் பாக்கியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நீடித்து வருகிறது. அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ், பாஜக இடையே கடும் கருத்து மோதலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசியதாவது:-

பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நீர், வனம், நிலங்களை கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு தாரைவார்த்து கொடுக்க மோடி விரும்புகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்கும். அரசியல் அமைப்பை, ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், பழங்குடியின மக்களையும் காப்பாற்றுவதுதான் இந்த தேர்தலில் நோக்கமாக உள்ளது. நாட்டில் உள்ள 14 – 15 தொழிலதிபர்களுக்கு வளங்களை கொடுக்க மோடி நினைக்கிறார். 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.