பிரதமர் அலுவலகத்தில் கோலாகலம்: குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டி பெண்கள் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
ரக்ஷா பந்தன் நாளையொட்டி பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரது பதிவு; இத்தகைய புனிதத் திருநாள் உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு சேர்க்கட்டும். அன்பு, பாசம் மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கான இந்த பந்தம் என்றும் விலகாமல் என்றென்றும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தனை கொண்டாடி மகிழ்ந்தார். பள்ளிக் குழந்தைகள் அவருக்கு ராக்கி கயிறைக் கட்டி அன்பை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, மறக்க முடியாத தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
PM Narendra Modi celebrates Raksha Bandhan with Hi Five and Smiles at 7 Lok Kalyan Marg#RakshaBandhan #PMModi https://t.co/TOc3AtY0N3 pic.twitter.com/kpHzrPImd6
— India Strikes YT 🇮🇳 (@IndiaStrikes_) August 28, 2026