முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Birthday greetings to Tamil Nadu CM Thiru MK Stalin. May he lead a long and healthy life.@mkstalin
— Narendra Modi (@narendramodi) March 1, 2025
இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.