குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்!

 
modi

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் முயற்சிகளை எடுத்தவர் குமரி அனந்தன்; சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் தொண்டுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையுற்றேன்; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள் பதிவில், தமிழ் மொழிக்காகவும், மக்களுக்காகவும், கலாசாரத்துக்காகவும் போராடிய காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையடைந்தேன் குமரி அனந்தனின் தொடர் முயற்சியே, நாடாளுமன்றத்தில் தமிழ் குரல்களை ஒலிக்க வைத்தது. காமராஜரின் பெருமைமிக்க சீடராக வாழ்ந்தவர் குமரி அனந்தன்  என குறிப்பிட்டுள்ளார்.