இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி இந்த கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ``சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடியுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.