பிரதமர் மோடி பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் வாழ்த்து!!

 
stalin modi

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , மாண்புமிகு பிரதமர் திரு .நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்  என்று கூறியுள்ளார். 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.நமது தேசத்திற்கான உங்களின் தொலைநோக்குப் பார்வையும் பணியும் உலகை யதார்த்தமாக வடிவமைக்கட்டும். கடமை மற்றும் சேவையுடன் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார். 


பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 72-ஆவது பிறந்தநாளில் அவர் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்; நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாரத பிரதமர் மாண்புமிகு திரு . நரேந்திரமோடிஜி அவர்களுக்கு 72 - வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் . நல்லரசாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிற மத்திய அரசை , வல்லரசாக மாற்றக் கூடிய தங்களது கடின உழைப்பிற்கும் , நாட்டுப்பற்றிற்கும் , தொடர்பணிக்கும் , இந்நாளிலே நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , நீண்ட ஆயுளையும் இறைவன் கொடுக்க , இந்த நல்ல நாளில் வாழ்த்துகிறேன் . பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 72ஆவது பிறந்தநாளில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்;பொதுவாழ்வில் வெற்றி பெற்று நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.