நாங்குநேரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் +2 மாணவன் கைது!

 
arrest

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் அந்த நபர் ஜெராக்ஸ் கடை வைத்தும் நடத்தி வருகிறார். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஜெராக்ஸ் கடை கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில், கடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. 

nanguneri

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். நாங்குநேரியில் சாதிரீதியாக தாக்கப்பட்ட மாணவருக்கு அந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உதவியதாக கூறப்படுகிறது. இதனால் தனது ஊருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி +2 மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.