மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை

 
 suicide

பெரியபாளையம் அருகே பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

suicide

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16), ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார். நேற்று +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் +1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை மகனை கடிந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஜெயசூர்யா நள்ளிரவில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

வாயில் நுரை தள்ளியபடி அலறி துடித்த மகனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். +1தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.