செல்போனில் விளையாடியதை தந்தை தட்டி கேட்டதால் பிளஸ் ஒன் மாணவி தற்கொலை

 
 suicide

பொன்னேரி அருகே செல்போனில் விளையாடியதை தந்தை தட்டி கேட்டதால் பிளஸ் ஒன் மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

suicide

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவரது மகள் லோகேஸ்வரி (17). இவர் பொன்னேரி அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். லோகேஸ்வரி எந்நேரமும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. தனது மகள் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடுவதை ராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார். 

கடந்த 29-ஆம் தேதி இரவு தந்தை கண்டித்ததால் மனமுடைந்த லோகேஸ்வரி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். வீட்டில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்த லோகேஸ்வரியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லோகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.