பிளஸ் 2 மாணவி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

திருவள்ளூரில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் போட்டே லேமினேஷன் கடை உரிமையாளர் சுரேஷ். இவருக்கு மகன், மகள் உள்ளனர். அவருடை மகள் பிரியா (17), திருவள்ளுரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இன்று அதிகாலை பிரியா வீட்டில் எழுந்து படித்து தேர்வுக்கு தயாராகி வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 5:30 மணியளவில் பிரியா கேனில் வைத்திருந்த பெட்ரோல் எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயே அனைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
80 சதவீத தீக்காய்களுடன் பாதிப்படைந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தான் வாழ பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எதனால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டார் என்பது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி அதிகாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.