தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது

 
student exam

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

exam


தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வில் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வரும் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

மாணவ மாணவிகள் அனைவரும் காலை 8.30 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு சென்று தேர்வு எழுதத் தொடங்கினர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் மொழி தேர்வு நடந்தது. இதில் மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாளர்கள் வழங்கப்பட்டது. அந்த வினாத்தாள்களை படிப்பதற்காக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டவுடன் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். இந்த தேர்வை கண்காணிப்பதற்காக  முதன்மை கண்காணிப்பாளர்கள்,  அறை கண்காணிப்பாளர்கள், 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.