ப்ளீஸ் வெயிட்..2 நாளில் சொல்கிறேன்..! - புதிய கட்சி தொடக்கம் குறித்து அண்ணாமலை கொடுத்த 'சஸ்பென்ஸ்' பதில்!

 
annamalai

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், "நீங்கள் புதிய கட்சி தொடங்கப்போவதாகப் பேசப்படுகிறதே, அது உண்மையா?" என நிருபர்கள் காரசாரமாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு எவ்விதப் பதற்றமும் இன்றி, "2 நாளில் சொல்கிறேன்" என அவர் அளித்துள்ள ஒற்றை வரிப் பதில், தமிழக அரசியல் களத்தில் அடுத்த பெரிய பூகம்பத்திற்கான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழக பாஜாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கணக்குகளில் டெல்லி மேலிடத்தின் தலையீடுகள் அண்ணாமலைக்குத் திருப்தி அளிக்கவில்லை என்ற தகவல்கள் ஏற்கனவே கசிந்தன. இந்நிலையில், தேசியக் கட்சியின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான ஒரு மாநிலக் கட்சியைத் தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை என்ற தனிமனித பிம்பத்திற்காக பாஜக-வை ஆதரித்த நடுநிலையான இளைஞர்கள் மற்றும் சமூக வலைதளப் படையினர், அவர் புதிய கட்சி தொடங்கினால் எவ்விதத் தயக்கமும் இன்றி தவெக-விற்கு இணையாக அண்ணாமலையின் புதிய கட்சியை நோக்கிப் படையெடுப்பார்கள்.தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாரம்பரிய எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கு அண்ணாமலையின் புதிய கட்சி ஒரு புத்துணர்ச்சியான மாற்றாக அமைய வாய்ப்புள்ளது.