பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

 
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரின்பேரில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image

மதுபோதையில் இருந்த வேல்முருகன், ஆற்காடு சாலை வழியாக வந்துள்ளார். அப்போது அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. மூடப்பட்ட சாலை வழியாக தடையை மீறி சென்றதை கண்டித்த மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கியதாகவும், மெட்ரோ ரயில் உதவி மேலாளரை  தகாத வார்த்தையால் திட்டியதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார், சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.