பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!!

 
ttv

பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேவர் தந்த தேவர் " என போற்றப்படுபவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தலைமையில் பணியாற்றி தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கரத்தை  வலுப்படுத்தியவரும், கல்வி தந்தையுமான திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.

TTV Dhinakaran

தமிழகத்தின் தென்பகுதி மக்களுக்காக கல்வியை பெற்றுதந்ததோடு, நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையான கச்சத்தீவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் எழுப்பிய குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. 

tn

தற்காலிக சட்டப்பேரவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என திறம்பட மக்கள் பணியாற்றிய திரு.பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.