“விஜய் கனவு உலகில் உள்ளார்! கமலுக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்”- பியூஷ் கோயல்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் 2 நாட்கள் ஆகும் என பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், “ஊழல் திமுக அரசை வீழ்த்த NDA கூட்டணி ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக செயல்படுகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரட்டை எஞ்சின் அரசு அமையும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மக்கள் தற்போது அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் எதிர்பார்க்கிறார்கள். வலுவான நிலையில் உள்ள NDA கூட்டணி நிச்சயம் திமுகவை வீழ்த்தும். பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான நல்லாட்சியை அமைக்கும்.
தமிழ்நாட்டு மக்கள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் இங்கே பேசுகிறார். விஜய் ஒரு கனவு உலகில் உள்ளார். அவர் குறிப்பிட்ட வாக்குகளை மட்டுமே வாங்குவார். அண்மையில் விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு 3,4 தொகுதிகளே கிடைத்தன. அதே நிலை விஜய்க்கு ஏற்படும்” என்றார்.

