தேர்தலில் நான் சீட் கேட்கவே இல்லை- சரத்குமார்

 
’’தனிமனிதர் கூறும் கருத்துகளுக்கு பதில் கருத்தை கேட்காதீர்கள்’’- சரத்குமார்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவே இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளார்.


பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தனக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும், தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவே இல்லை. என்னுடன் பயணித்தவர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்களுக்காக குரல் கொடுத்தேன். தனி மனிதர்களை தாக்கிதான் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்கிறாரே தவிர புதிதாக ஒன்றுமில்லை” என்றார்.