“அரசு எப்படி செயல்படுகிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை”- பியூஷ் கோயல்

 
உதயநிதியை முதல்வராக்க விடக்கூடாது: பியூஷ் கோயல்  

நடிப்பது நடிகர்கள் வேலை, ஆனால் நாட்டை ஆள்வது அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் வேலை என தவெக தலைவர் விஜயை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சாடினார்.

பியூஷ் கோயல்


திருப்பூர் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில்துறை நிறுவனமான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். முன்னதாக, அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிர்ப்பு அதிக அளவில் உள்ளது. எங்கு சென்றாலும் வேண்டாம் ஸ்டாலின் வேண்டாம் திமுக என்ற குரலை ஒலிக்கிறது மக்கள் தற்போதைய ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் ஒரு வலுவான அரசை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்குள் நிலவும் மோதல்களைப் போல் இன்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு குடும்பமாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். திமுக அரசால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. எங்களது கூட்டணி ஆட்சி அமைந்ததும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படும் அதிகப்படியான முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் தமிழக இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். திருப்பூரைப் பொறுத்தவரை திருப்பூர் தொழில் அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒன்பது தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உலக சந்தை திருப்பூருக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பிரம்மாண்டமான தொழில்பேட்டை ஒன்று அமைக்கப்படும் இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். பருத்தி மீதான வரி குறித்த கேள்விக்கு, கடந்த ஆறு மாதமாக பருத்தி மீதான வரியை நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் வரியை நிறுத்தி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் உடனடியாக இதற்கு தீர்வு சொல்ல முடியாது. 
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, விஜய் எம்எல்ஏ ஆகிறாரா என்பது குறித்து எனக்கு தெரியாது, ஆனால் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

சினிமாவில் அமிதாப் பச்சன் அல்லது ஷாருக்கான் போன்றவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இயல்பானது அதைத்தான் மதிப்பதாகவும் அது போல தான் விஜய்க்கு இருக்கும் ஈர்ப்பும். அரசு எப்படி செயல்படுகிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை, தணிக்கை வாரியம் தன்னாட்சி பெற்ற அமைப்பு, அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நடிப்பது நடிகரின் வேலை ஆனால் நாட்டை நிர்வாகிப்பது அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் வேலை அதனை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மே நான்காம் தேதிக்கு பிறகு அடுத்த முதலமைச்சராகி சிறப்பாக செய்வார். பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்றும் தெரிவித்தார்.