உதயநிதியை முதல்வராக்க விடக்கூடாது: பியூஷ் கோயல்

 
உதயநிதியை முதல்வராக்க விடக்கூடாது: பியூஷ் கோயல்  

உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் விடக்கூடாது என பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், “கோவை மெட்ரோ திட்டம் குறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். மெட்ரோ திட்டத்திற்கு தேவையான விவரங்களை தமிழக அரசு வழங்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை திமுக அரசு விரும்பவில்லை. தமிழகத்திற்கு நிறைய வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம். உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் விடக்கூடாது. உதயநிதியை முதல்வராக்க மாட்டோம் என திமுக உறுதி அளிக்க தயாரா? தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி முதலீடு வரும் என்றார்கள். அது எங்கே போனது?

தமிழ்நாடு பலவீனமான மாநிலமாக உள்ளது. வாக்குறுதி அளித்தபடி, கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை திமுக செய்யவில்லை. ஊழல், முறைகேடுகளில் மட்டுமே திமுக கவனம் செலுத்துகிறது. மக்களை பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. கற்றறிந்தவர்கள், அறிவார்ந்தவர்கள் யாரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.