"இண்டிகோ விமானத்தில் (6F7258) விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது" - சு.வெங்கடேசன் எம்.பி.,

 
tn

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்  (6F7258) விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது என்று எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

indigo

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்  (6F7258) விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது. 

“இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி” என்று ஒலித்தது அந்தக்குரல். 

காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள் ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். 


அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி வெங்கடேசை அழைத்து வாழ்த்துச்சொன்னேன். 

வேள்பாரி வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.