10 வது மெகா தடுப்பூசி முகாம் : 2வது டோஸ் செலுத்த 71லட்சம் பேருக்கு அழைப்பு!!

 
vaccine

தமிழகத்தில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது 

vaccine

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வந்தாலும் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் இதுவரை 6.20 கோடி பேருக்கு ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தை பொறுத்தவரை செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.  இதில் வழக்கத்தை விட கூடுதலாக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  முதலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வாரத்தில் இருமுறை என வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை நடத்தி வருகிறது.

vaccine

இந்நிலையில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம்,  தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.   சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படாது.  அதனால் இரு தவணை ஊசியையும் செலுத்திக் கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் ஏற்படும்.  இரண்டாம் தவணைக்கான காலஅவகாசம் முடிந்துள்ள நிலையில் 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  தமிழக அரசிடம் தற்போது ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.