புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் சிறந்த தளபதியாக விளங்கியவர் பி.எச்.பாண்டியன் - ஓபிஎஸ் ட்வீட்!!

 
ops

தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். எம்.ஜி.ஆர். 1972இல் அதிமுகவைத் தொடங்கியபோது பி. எச் பாண்டியன் அக்கட்சியியல் இணைந்தார். 1972 முதல் 1988வரை அதிமுக வழக்கறிஞர் அணியியன் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 

tnt

1989இல் அதிமுகவின் வி. என். ஜானகி இராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். 1988 ஆண்டில் சுதந்திர தினத்திற்கு ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றினார். இவரே கோட்டையில் கொடி ஏற்றிய முதல் இந்திய சட்டமன்ற சபாநாயகர் ஆவார்.



இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இளம் வயது முதலே மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர், கழகத்தின் மாநில வழக்கறிஞராக செயல்பட்டவர், அஇஅதிமுக என்னும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்ட போது புரட்சித்தலைவருடன் அரசியல் களத்தில் கடுமையாக உழைத்தவரும், புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் சிறந்த தளபதியாக விளங்கியவருமான உயர்திரு. பி.எச்.பாண்டியன் அவர்களின் 3-ஆம் நினைவு நாளான இன்று கழகத்திற்காக அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்!"என்று குறிப்பிட்டுள்ளார்.