“பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க கூடாது”- இந்தியன் ஆயில் நிறுவனம்
பாட்டிகளில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டீலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தரவில், “பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது. பாட்டில்கள், கேன்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோலால் பெரும் விபத்து ஏற்படலாம். பெட்ரோல் நிலையங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம். பெட்ரோல் நிலையன்கள் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல்களை நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது ஆபத்தானது மற்றும் குற்றச்ச்செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து விற்பனை நிலையங்களிலும் கேன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளது.
-

