தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக்கொலை!

கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கப்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி பாண்டி (வயது 30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இன்று பைக்கில் கடம்பூர் நோக்கி செல்லும் போது சத்திரப்பட்டி அருகே எதிரே வந்த கார் சங்கிலி பாண்டி மீது மோதி உள்ளது. இதில் சங்கிலி பாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது உடலில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. பின்னர் இது கொலை வழக்கு என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் காரை பறிமுதல் செய்த போலீசார் சங்கிலி பாண்டியனை கொலை செய்த நபர் யார் ? எதற்காக கொலை செய்தார்கள் ? என்ற கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சண்முகராஜ், மகாராஜா ஆகிய இருவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.