அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் கைது!!

 
tn

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

tn
சிலை மீது பட்டு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்தது. இது தொடர்பாக குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் அதே பகுதியை சேர்ந்த வெற்றி, கிருஷ்ணகுமார், சதீஷ் , விஜயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

tn

பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.