சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை : இன்றைய நிலவரம் இதுதான்!!

 
petrol

சென்னையில் 59வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

petrol

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் தினசரி மாற்றங்களும் ஏற்படும்.  நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கூடுதலாக விற்பனையாகி வருகிறது. கடந்த 58 நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

petrol

அந்த வகையில் இன்று 59 ஆவது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40க்கும் , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு  பிறந்தாலும் பெட்ரோல் விலையில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உள்ளது.  இது வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்க கூடியதாக உள்ளது.