வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

 
petrol

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.  அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.96.26 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.1.99 பைசா உயர்த்தப்பட்டு ரூ.86.47 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 6மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.